டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குணா படத்தில் வேர்ல்ட் நாயகன் அடிக்கடி உச்சரிக்கும் பெயரைக் கொண்ட நடிகை, அவருடன் முறுக்கு மீசை படத்திலும் நடித்தார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலானவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். வேர்ல்ட் நாயகனின் விஸ்வரூப படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி வந்தவருக்கு டப்பிங் பேசத்தான் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து திருநெல்வேலி பக்கத்து ஊர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். அதுவும் நாயகனின் தோழிக்கு சென்றது. இனி வேர்ல்ட் நாயகனை நம்பினால் ஒன்றும் நடக்காது என்று தனியாக வாய்ப்பு வேட்டையை தொடங்கினார். அதன் பயனாக பிரகாச நடிகரின் மனைவி ரீ-என்ட்ரியாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பை பெற்றுவிட்டார். இனி என் வழி தனி வழி என்று களத்தில் இறங்கி விட்டாராம்.