ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் அனிருத். அதையடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என குறைவான படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் குறுகிய காலத்திலேயே அவர் விஜய் படத்திறகு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிடடதால் முன்வரிசையில் இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
முக்கியமாக, ஏ.ஆர்.முருகதாஸ்.-விஜய் கூட்டணி அமைத்த துப்பர்கி படத்துக்கு ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜை அதற்கடுத்து அவர்கள் இணைந்த கத்தி படத்தில் இருந்து ஓரங்கட்டி தான் அப்படத்தை கைப்பற்றினார் அனிருத். அதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார் ஹாரிஸ் ஜெயராஜ்.
அதையடுத்து அரை டஜன் மெகா படங்களில் தற்போது கமிட்டாகியிருக்கும் அவர், யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்த சில கம்பெனி படங்களையும் தன் பக்கம் இழுத்திருக்கிறார். இதனால் இதுவரை யாரையும் போட்டியாக கருதாத யுவன், தற்போது அனிருத்தை போட்டியாக நினைக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால் அவரது பாடல்களை விட தான் இசையமைக்கும் பட பாடல்களை அதிக இணையதள நேயர்கள் கேட்டு ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், அனிருத் இசையமைத்துள்ள காக்கி சட்டை, யுவன் இசையமைத்துள்ள வை ராஜா வை படங்களின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், யாருடைய பாடல்களை அதிகமானோர் கேட்டு ரசிக்கிறார்கள் என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடஙகியுள்ளனர்.