‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் ஷாஜி கைலாஷ் குறிப்பிடத்தக்கவர். பல ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர், தமிழில் ஆர்கே நடித்த ''எல்லாம் அவன் செயல்'' என்ற படத்தை இயக்கியவர் இப்போது மீணடும் அவரை வைத்து என் வழி தனி வழி என்ற படத்தை இயக்கியுளளார். இதையடுத்து, வைகை எக்ஸ்பிரஸ் என்ற அடுத்த படத்திலும் ஆர்கேவை இயக்குகிறார் ஷாஜி கைலாஷ.
நேற்று சென்னையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, படத்தைப்பறறி படத்தில் நடித்தவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருமே தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால், ஷாஜி கைலாஷை பேச அழைத்தபோது, பேச மறுத்தார்.
அதையடுத்து, படத்தை இயக்கிய டைரக்டர் என்ற முறையில் ஒரு இரண்டு வார்த்தையாவது பேசுங்கள் என அனைவரும் அவரை கட்டாயப்படுத்தியபோது, தனது இருக்கையில் இருந்து எழுந்து வணக்கம், நன்றி என்று மட்டுமே சொன்னவர், படத்தின் வெற்றிக்கு பிறகு நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.