Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்திரன்-2ம் பாகம்: ரஜினிகாந்தா... அமீர்கானா....?

16 டிச, 2014 - 16:44 IST
எழுத்தின் அளவு:

'லிங்கா' படம் வெளிவந்ததையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய பேச்சுக்களும், தகவல்களும் இப்போதே வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த மாதமே இயக்குனர் ஷங்கர் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 'லிங்கா' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஷங்கர், ரஜினியைச் சந்தித்து இது சம்பந்தமாக பேசினார் என்று எப்போதோ செய்திகளும் வந்தன.


தற்போது 'எந்திரன் 2' பற்றிய பேச்சுக்கள் அதிகமாகி வருகிறது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமிர் கான் 'எந்திரன் 2'வில் நடிக்க உள்ளதாகவும், ஷங்கர் அவரைச் சந்தித்து பேசிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஐ' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படம் உலக அளவில் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் நினைத்து வருகிறாராம். 'ஐ' படம் தற்போது இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதனால், அடுத்த படம் அதை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றால், ஹிந்தியில் முன்னணியில் ஒரு நடிகருடன் இணைந்தால் இன்னும் அதிகமாகப் பேசப்படலாம் என நினைக்கிறாராம்.


இன்னொரு பக்கம், ரஜினிகாந்த்தான் 'எந்திரன் 2' படத்தின் ஹீரோ என்றும் அமீர்கான் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் உறுதியற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு விஷயம் நடந்தால், ரஜினிகாந்த், அமீர் கான், ஷங்கர் இணையும் அந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய சாதனைப் படமாக அமையும் என்பது மட்டும் உறுதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in