'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் காமெடி நடிகர் சூரி பேசும்போது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். வெள்ளைக்காரதுரை படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் சூரியின் மேக்கப் ரூமுக்கு வந்த விக்ரம் பிரபு, தனக்கு காமெடி சப்ஜெக்ட்டு புதுசு என்பதால் தான் நடிக்கும்போது உதவி பண்ணுங்கள் என்று சூரியிடம் கேட்டாராம். இதை சூரி சொல்ல, பிறகு பேச வந்த விக்ரம் பிரபுவும் அதை உறுதிப்படுத்தினார். அதை வைத்து விக்ரம் பிரபுவின் எளிமையையும் தன்னடக்கத்தையும் பலரும் பாராட்டிப்பேசினார்கள். படப்பிடிப்பில் சூரி உடன் நட்பாகப் பழகினாலும், வெள்ளைக்காரதுரை படத்தின் விளம்பரங்களில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விக்ரம் பிரபு விரும்பவில்லையாம். விக்ரம் பிரபு - சூரி இணைந்து நடிக்கும் வெள்ளைக்காரதுரை என்று முதலில் விளம்பர டிசைன்களை தயார் செய்துள்ளனர். அதைப்பார்த்த விக்ரம் பிரபு கடுப்பாகிவிட்டாராம். உடனடியாய் கோபுரம் பிலிம்ஸ் புரடக்ஷன்ஸ் மானேஜரை அழைத்து தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். தன் பெயருடன் காமெடியன் பெயரை சமமாகப் போடுவதா? என்று கோபப்பட்டதை அடுத்து தற்போது வெள்ளைக்காரதுரை விளம்பரங்களில் விக்ரம் பிரபு நடிக்கும் என்று மாற்றிவிட்டனர்.