Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்த நாளில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

16 டிச, 2014 - 11:01 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார்.


நடிகர் ஆதிக்கு, டிசம்பர் 14ம் தேதி பிறந்தநாளாகும். வழக்கமாக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் நண்பர்கள் புடைசூழ பிரமாண்ட கேக்வெட்டி கொண்டாடுவார்கள். சிலர் அனாதை இல்லங்கள் சென்று உதவிகள் செய்வார்கள். நடிகர் ஆதி தனது பிறந்த நாளை மாறுபட்ட வகையில் கொண்டாடினார். அவர் அதிகாலையில் தன் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரை சென்றார்.அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றி சுத்தம் செய்தார். இதில் எக்ஸ்னோரா அமைப்பையும் இணைத்துக் கொண்டார்.


க்ளீன் அண்ட் க்ரீன் சென்னை என்கிற பெயரில் இந்நிகழ்வை நடத்தினார்.கடற்கரையை தூய்மைப்படுத்தியதுடன் மரக்கன்றுகளையும் நட்டார். காலை நேரத்தில் இந்த தூய்மைப்பணி நடைபெற்றதால் ரசிகர்கள், அருகிலுள்ளவர்கள் மட்டுமல்ல நடைப்பயிற்சி சென்றவர்கள் கூட இதில் ஆர்வமாகப் பங்கேற்றனர். தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியுள்ளார். அந்தப் பயணத்தில் ஆதியும் இணைந்துள்ளார் எனலாம்.


இது பற்றி நடிகர் ஆதி கூறும்போது "இந்த தூய்மைப் பணியை மக்களிடம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக செய்தோம். என் பிறந்த நாளில் அதுவும் காலையிலேயே இப்படி தொடங்கியதில் எனக்குப் பெருமையாகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. "என்கிறார்.


நடிகர் ஆதி கண்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏற்கெனவே ஆதி, தான் நடிக்கும் யாகா வாராயினும் நாகாக்க படப்பிடிப்பின் போதே படக்குழுவினரில் பலரையும் கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார். இதற்கான ஒப்பந்த படிவங்கள் சங்கர நேத்ரலயாவில் வழங்கப்பட்டுவிட்டன. இதன் தொடர்ச்சியாக,தன் பிறந்த நாளிலும் 28 பேரை கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்ததையும் பெருமையுடன் கூறுகிறார்.


ஆதி தன் நண்பர்கள் 8 பேருடன் இணைந்து லெட்ஸ் ப்ரிட்ஜ் என்கிற அமைப்பை வைத்திருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வாக்குரிமை உள்ளவர்களுக்கான வாக்களிக்கும் விழிப்புணர்வை வித்தியாசமாக நடத்தினர். இதன்படி சின்னஞ்சிறிய 50 குழந்தைகளை கொண்டு புதிதாக வாக்குரிமை வயது அடைந்தவர்களிடம் சென்று அவர்களின் கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கச் செய்தனர். அதில் எங்கள் எதிர் காலம் உங்கள் கையில்! சிந்திப்பீர் வாக்களிப்பீர்! என்று எழுதப்பட்டு இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.குழந்தைகள் நடித்த அதற்கான பாடல் காட்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய்சேதுபதி போன்றோரும் ஆர்வமுடன் தோன்றியிருந்தார்கள்.


பிறந்தநாள் விழா என்றால் ரசிகர்களைக் கூச்சல் போடவும் தோரணம் கட்டவும் என்று பயன்படுத்தும் நடிகர்களிடம் ஆதி சமூக நோக்கில் ரசிகர்களைப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in