தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்த 'லிங்கா' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து உலகம் முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான விமர்சனங்களுக்கிடையில் இத்திரைப்படம் 100 கோடி ரூபாயையும் வசூல் செய்துள்ளதாக ஒரு புறம் தகவல் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட பட நிறுவனம் அதைப் பற்றி அறிவிக்கும் வரை அது மாதிரி பல தகவல்கள் உலவிக் கொண்டுதானிருக்கும். இதனிடையே, தெலுங்கில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'லிங்கா' படத்திற்கு அங்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு ரசிகர்களும் படத்தை மிகவும் எதிர்பார்த்ததாகவும், ஆனால், அவர்களுக்கு பிடித்த மாதிரி படம் இல்லையென்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் மூன்று நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலானாலும், நேற்று முதல் படத்தின் வசூல் அப்படியே குறைந்துவிட்டதாகச் செல்கிறார்கள். படம் வியாபாரம் செய்யப்பட்ட அளவிற்கு வசூல் ஆக வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஓடினால்தான் அந்தத் தொகையை வசூலிக்க முடியும் என்கிறார்கள்.
'எந்திரன்' படத்தின் வசூலைக் கருத்தில் கொண்டுதான் 'லிங்கா' படத்திற்கான வியாபாரமும் நடைபெற்றதாம். ஆனால், அந்தப் படம் போல் 'லிங்கா' படம் இல்லாமல், ஒரு சாதாரணப் படமாகவே இருப்பதாக தெலுங்குத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். அதிலும், தெலுங்கு மீடியாக்களின் நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தைப் பதம் பார்த்துவிட்டது. மொத்தத்தில் சுமார் 15 கோடி வரை படத்திற்கு நஷ்டம் வர வாய்ப்புள்ளளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழிலிருந்து வெளியாகும் டப்பிங் படங்களுக்கு மவுசு குறைந்து வருவதை அவர்களும் மௌனமாக ரசித்து வருகிறார்கள்.