தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம் ஐ படத்தில் இரண்டரை ஆண்டுகளாக நடித்து முடித்து விட்டு இப்போது வேறு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதும் அந்த படத்துக்காக அவர் செய்த அர்ப்பணிப்பை இப்போதும் அப்படக்குழுவினர் வியப்புடன் பேசிக்கொள்கிறார்கள். அவர் அந்த படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் என்றபோதும், தனது உடம்பை 110 கிலோவாக உயர்த்தி நடித்தவர். பினனர் இன்னொரு கெட்டப்புக்காக 50 கிலோவாக உடல் எடையை குறைத்தாராம்.
அப்போதெல்லாம் தனது வீட்டிலேயே ஜிம் உருவாக்கி ஒரு பாடி பிட்னஸ் பயிற்சியாளரையும் கூடவே வைததிருநதாராம் விக்ரம். வழக்கமான ரைஸ், ஆயில் அடங்கிய எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளாமல், மருந்து சாப்பிடுவது போன்று சில இலை தழைகளைததான் அவர் அதிகமாக சாப்பிட்டாராம்.
அதனால் 3 மாதங்களில் ஆள் அடையாளமே தெரியாத விக்ரமாக உருமாறி வந்து நின்றபோது ஐ பட யூனிட்டே அசந்து போனதாம். ஒரு சினிமாவுக்காக இப்படியும் ஒரு மனிதர் தனது உடல்கட்டை தியாகம் செய்திருக்கிறாரே என்று விக்ரமை ஆச்சர்யத்துடனும் அதேசமயம் அச்சத்துடனும் பார்த்தார்களாம். காரணம், இந்த உடல் எடை குறைப்பினால் அவருக்கு ஏதேனும பிரச்சினை வந்து விடக்கூடாதே என்று அனைவருமே பயந்தார்களாம்.