தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சத்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்த வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். அதையடுத்து, அவர் தற்போது நெடும்பாறைக்காடு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். காட்டுப்பகுதியில் வசிக்கும் ஒருவன் நாட்டுக்குள் வந்தபோது அவன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படமாம். அப்படத்தில் நடித்துள்ள அனைத்து கேரகடர்களும் காட்டுவாசி கெட்டப்பில் நடித்துள்ளார்களாம்.
ஆனால் இதற்கு முன்னதாக, ஒன் என்ற பெயரிலும் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கிறார். அதோடு, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன், எடிட்டர். இசையமைப்பாளர் என அனைத்தும் அவரேதானாம். கின்னஸ் சாதனைக்காக இந்த படத்தை அவர் எடுத்துளளாராம்.