Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்பு அர்ப்பணிப்பில் கிறிஸ்டியன் பாலேவை மிஞ்சிய விக்ரம்

15 டிச, 2014 - 17:06 IST
எழுத்தின் அளவு:

ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பாலே, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும், அதற்கும் பொருத்தமாக தனது உடற்கட்டை மாற்றிக்கொண்டே இருப்பார். 2002ம் ஆண்டு வெளிவந்த ரெயஜின் ஆஃப் பயர் படத்தில் 83 கிலோ உடல் எடையாக இருந்த பாலே, 2004ம் ஆண்டில் நடித்த தி மெசினிஸ்ட் படத்தில், உடல் எடையை 55 ஆக குறைத்தார். அதற்கடுத்த ஆண்டிலேயே, பேட்மேன் பிகின்ஸ் படத்திற்காக, உடல் எடையை 86 கிலோவாக அதிகப்படுத்தினார். அதேபோல், 2010ம ஆண்டில், தி ஃபைட்டர் படத்திற்காக, உடல் எடையை 66 கிலோவாக குறைத்திருந்த பாலே, 2012ம் ஆண்டி்ல, தி டார்க் க்நைட் ரைசஸ் படத்திற்காக, உடல் எடையை 90 கிலோவாக உயர்த்தினார். நடிப்பிற்காக, தன் உடலை வருத்திக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவராக இருந்த கிறிஸ்டியன் பாலேவை, ஒரே படத்தி்ல முந்திவிட்டார் தமிழ் நடிகர் சீயான் விக்ரம்.


விரைவில் வெளிவர உள்ள "ஐ" படத்திற்காக, பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ள விக்ரம், தற்போது தனது அடுத்த படத்திற்காக, உடலை மிகவும் வருத்தி, பார்ப்பவர்களால், இவர் விக்ரம் தானா? என்பது கூட அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.


இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில், பாடி பில்டர் போன்ற உடற்கட்டு கொண்ட விக்ரம், அடுத்த படத்தில், நோயாளி போன்று காட்சி தருகிறார்.


நடிப்பு அர்ப்பணிப்பில், ஒரு படத்திலேயே, ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பாலேவை, சீயான் விக்ரம் முந்தியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in