தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை இஷா கோபிகருக்கு திருமணம் ஆகவிருக்கிறது. தமிழில் விஜய், அரவிந்த் சாமி, விஜயகாந்த் உள்ளிட்டோருடன் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மும்பைக்கே சென்று விட்டார். இவரும் மும்பையை சேர்ந்த ரோத் நரங் என்ற ஓட்டல் அதிபரும் காதலித்து வருகிறார்கள். ரோத்தை இஷா கோபிகர் திருமணம் செய்யவிருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து இஷா கோபிகர் கூறுகையில், கடந்த ஆண்டு ரோத்தை சந்தித்தேன். இருவரும் நட்பாக பழகினோம். பின்னர் காதலிக்கத் தொடங்கினோம். எங்களது காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதனால் திருமணம் செய்ய முடிவு செய்தோம். தற்போது எனக்கு பட வேலைகள் பாக்கி இருப்பதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, என்றார். ஏற்கனவே நடிகை இஷா கோபிகர் நடிகர் இந்திரஜித்தை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.