ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2001ல் கெளதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. மாதவன் நாயகனாக நடித்த அந்த படத்தில்தான் ஹாரிஸ் ஜெயராஜூம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்ததால் அதன்பிறகு தான் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களுக்கும் ஹாரிஸையே இசையமைக்க வைத்தார் கெளதம்மேனன்.
பினனர், ஒரு படத்திற்கு குறித்த நேரத்தில் அவர் இசையமைத்துக் கொடுக்காததால் அவர்களுககிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, பிரிந்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே உள்ள ஆத்மார்த்தமான நட்பு மீண்டும் தற்போது அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் அவர்களை இணைத்திருக்கிறது. அதோடு, கெளதம்மேனன் இயக்கிய பல படங்களுககு இசையமைத்துள்ள ஹாரிஜ் ஜெயராஜ், அஜீத் படத்துக்கு இப்போதுதான் முதன்முறையாக இசையமைக்கிறார்.
அதனால், இதற்கு முன்பு கெளதம்மேனன் படத்துக்கு கொடுத்ததை விடவும டபுள் மடங்கு ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்ட ஹாரிஸ் ஜெயராஜ், என்னை அறிந்தால் படத்தின் இசைப்பணிக்காக பல நாட்கள் இரவு பகலாக தூங்காமல் கண்விழித்துள்ளாராம். பாடல்களுக்கு இசையமைத்தபோது ஒரு வாரம் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தவர், அவ்வப்போது அரை மணி, ஒரு மணி நேரம்தான் தூங்கினாராம்.
மேலும், பாடல்களை உருவாக்கியபோது, ஒரு சின்ன இசைக்கருவி பாடலை கொடுப்பது போன்று ஒலித்தாலும், உடனே அதை மாற்றிவிட்டு வேறு இசைக்கருவிகளை இசைக்க வைத்து பதிவு செய்தாராம். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் மெனக்கெட்ட ஹாரிஸ், இதுவரை தான் இசையமைத்த எந்த படத்திற்கும் கொடுக்காத உழைப்பை அஜீத் படத்துக்கு கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்.