Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் - சமந்தா...?

14 டிச, 2014 - 10:51 IST
எழுத்தின் அளவு:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இளம் காதல் ஜோடி என்று கிசுகிசுக்கப்படும் சித்தார்த், சமந்தா இதுவரை தெலுங்கில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த 'ஜபர்தஸ்த்' கடந்த ஆண்டு வெளிவந்தது. அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாகவே பேசப்பட்டது.


கடந்த வருடங்களில் அவர்களது காதல் பற்றி அதிகமாகக் கிசுகிசுக்கள் வந்தன, பின்னர் அவை அப்படியே அமுங்கிப் போய்விட்டன. ஆனால், 'காவியத் தலைவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வந்ததும், படம் வெளியான பின் சித்தார்த்தைப் பற்றி பரவசப்பட்டு சமந்தா டிவிட்டரில் கமெண்ட் போட்டதும் அவர்களுக்கிடையே காதல் தொடர்கிறது என்பதைப் புரிய வைப்பதாக உள்ளது.


திரைக்குப் பின்னால் காதலர்களாக இருக்கலாம் எனக் கருதப்படும் இந்த ஜோடி தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள 'பெங்களூரு டேஸ்' படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆர்யாவும் நாயகனாக நடிக்கப் போகிறார். தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா நடித்த 'பொம்மரிலு' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பாஸ்கர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in