Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் 'லிங்கா' சுமாரான வசூல்...

14 டிச, 2014 - 10:48 IST
எழுத்தின் அளவு:

“சிவாஜி, எந்திரன்” என ஷங்கருடன் கூட்டணி சேர்ந்து ரஜினிகாந்தை திரையில் பல மடங்கு ஹீரோயிசமாகக் காட்டிய அந்தப் படங்களின் வசூலையாவது 'லிங்கா' எடுக்குமா என்று தெலுங்குத் திரையுலகில் பேச ஆரம்பித்து விட்டார்களாம். 'எந்திரன்' படத்தின் வசூலைக் கூட 'லிங்கா'வால் தொட முடியாது என அவர்கள் தெரிவிப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் 'லிங்கா' தெலுங்குப் படத்திற்கென தனியான பிரமோஷன் நிகழ்ச்சிகள் வேறு நடைபெற்றது. அப்படியிருக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான 'லிங்கா' படம் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றே அங்கிருந்து வரும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதிக பட்சமாக நிஜாம் ஏரியாவில் 2 கோடி ரூபாய் வரையிலும், குறைந்த பட்சமாக நெல்லூரி ஏரியாவில் 10 லட்ச ரூபாய் வரையிலும், ஆக மொத்தம் 4 கோடி ரூபாய் வரைதான் முதல் நாள் வசூலாக படத்திற்கு இருந்திருக்கிறதாம். சுமார் 30 கோடி ரூபாய் வரையில் தெலுங்கு உரிமை விற்கப்பட்ட 'லிங்கா' படம் அசலை எடுப்பது கடினம் என்று சொல்கிறார்கள். வழக்கமான ரஜினி படமாகவும் இல்லாமல், வித்தியாசமான ரஜினி படமாகவும் இல்லாமல் இருப்பதே படத்தின் நெகட்டிவ் பேச்சுக்குக் காரணம் என்கிறார்கள்.


சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழாவில் கூட ரஜினிகாந்த் பேசும் போது, “ஒரு படத்தைத் தயாரிப்பதற்கு முன் பல மாதங்கள், அல்லது வருடங்கள் அந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு முந்தைய பணிகளை பார்ப்பார்கள். ஆனால், இந்தப் பிரம்மாண்ட படத்தை மொத்தமாக ஆறே மாதத்திற்குள் எடுத்து முடித்திருக்கிறோம்,” என்றார்.


தயாரிப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் செலுத்தியவர்கள், கதை, திரைக்கதை விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்களே என்றுதான் பேச்சு எழுந்திருக்கிறதாம். இன்னும் ஆற அமர கதை விவாதம் செய்து, கொஞ்சம் பொறுமையாக படத்தை வெளியிட்டிருக்கலாம் என்பது தெலுங்குத் திரையுலகினரின் பேச்சாக மட்டுமில்லை, இங்குள்ளவர்களின் பேச்சாகவும் இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in