‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
லேசா லேசா படத்தில் அறிமுகமானவர் த்ரிஷா. விஜய், அஜீத் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட அவர் கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்தார். ஆனால் ரஜினியுடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. ஆனால, லிங்கா படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த த்ரிஷா, இநதி நடிகை சோனாக்ஷி சின்ஹாவினால் அந்த வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில், தற்போது அஜீத்துடன், என்னை அறிந்தால், ஜெயம்ரவியுடன் பூலோகம், அப்பாடக்கர் போன்ற படங்களில நடித்து வருபவர், கன்னட படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் வருண்மணியனுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஏற்கனவே செய்திகளை அவர் மறுத்தார். ஆனால் அந்த செய்தியை அவர் மறுப்பதற்கு டைரக்டர் கெளதம்மேனன்தான் காரணம் என்கிறார்கள். தற்போது அவர் அஜீத்தை வைத்து இயக்கி வரும் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால். இந்த நேரத்தில் அப்படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ள த்ரிஷாவின் திருமண செய்திகள் வெளியானால், படத்துக்கு ஏதேனும் ஒருவகையில் மைனசாகலாம் என்று அவர் நினைக்கிறாராம்.
அதனால்தான், படம வெளியாகி ஓரிரு வாரங்கள் ஓடி முடிக்கும் வரை இந்த விசயத்தைப்பற்றி ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டாம் என்று கெளதம்மேனன், த்ரிஷாவுக்கு கண்டிசன் போட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.