ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் 'என்னை அறிந்தால்' படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலையும், வாரத்துக்கு ஒரு பாடல் வீதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சில தினங்களுக்கு முன், 'அதாரு அதாரு...'என்ற பாடல் வெளியிடப்பட்டது. யூடியூபில் இந்தப்பாடல் வெளியான உடனேயே ஃபேஸ்புக், ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் புரமோட் பண்ணி அந்தப் பாடலையே சூப்பர் ஹிட்டாக்கிவிட்டனர். நேற்று வெளியான லிங்கா படப்பாடல்களையே ஓரங்கட்டுமளவுக்கு எல்லா இடங்களிலம் அதாரு இதாரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடலை ரசித்ததோடு அஜித் ரசிகர்கள் சும்மா இல்லை. இந்தப்பாடல்தான் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் அறிமுகப் பாடல் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். லேட்டஸ்ட் தகவலின்படி, இது அஜித்தின் அறிமுகப் பாடல் இல்லையாம். என்னை அறிந்தால் படத்தில் வரும் கேங்ஸ்டர் பாடலாம்! இதனை படத்தின் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜே தெளிவுப்படுத்தியுள்ளார்.