மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
இது என் வாழ்க்கையில் வித்தியாசமான பிறந்த நாள். என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி என்று தன் கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துளளார் ரஜினிகாந்த்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியை, தமிழகம், இந்தியா தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி பிறந்தநாளான நேற்று, அவர் நடித்த லிங்காவும் வெளியாகி, பெரும் வரவேற்புடன் ஓடி கொண்டுள்ளது. தனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன, தனக்காக வேண்டிக் கொண்ட, பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவரே கைப்பட எழுதிய அந்தக் கடிதம்: இந்த 12.12.14 என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். இந்நாளில் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவர்கள் என்றும் நலமோடு வாழ இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் ரஜினிகாந்த் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.