‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஷாரூக் கான், கஜோல் நடிப்பில் உருவான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம், மும்பை தியேட்டர் ஒன்றில், 1000மாவது வார வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. மும்பையில், மராத்தா மந்திர் தியேட்டரில், படத்தின் காட்சியை, ஷாரூக் கான் மற்றும் கஜோல் நேற்று பார்த்தனர். அவர்களுக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். படத்தின் இடைவேளையின் போது, ஷாரூக் கான், ரசிகர்களின் இடத்திற்கே வந்து அவர்களுடன் கலந்துரையாடியது மட்டுமல்லாது, அவர்களுடன் அமர்ந்து படத்தையும் பார்த்தார். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஷாரூக் கான், நடனமாடியும் அசத்தினார். படம் முடிந்த பிறகு, பால்கனிக்கு சென்ற ஷாரூக், அங்கு குழுமியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார். கஜோலுக்கு, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால், அவர், உள்ளேயே அமர்ந்திருந்தார்.