இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் இடம்பெற்ற சிறந்த இசையமைப்பிற்காக, ஆஸ்கர் விருதிற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு , பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், விருது பெறப்போகும் படங்களின் இறுதிப்பட்டியல், ஜனவரி மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசைக்காக, 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் அனிமேஷனில் வெளியான கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ''கோச்சடையான்'' தவிர்த்து ஏ.ஆர்.ரஹ்மானின், ''தி ஹண்டரடு புட் ஜர்னி'', ''மில்லியன் டாலர் ஆர்ம்'' போன்ற படங்களும் சிறந்த இசையமைப்புக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு கிடைக்கும் முதல் ஆஸ்கார் விருதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.