'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
''நண்பேன்டா'' படத்திற்கு பிறகு உதயநிதி நடிக்க இருக்கும் படத்தை மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். இதில் ஸ்ரீதிவ்யா, உதயநிதிக்கு ஜோடியாகவும், சத்யராஜ் தந்தையாகவும் நடிக்க உள்ளனர். படத்திற்கு கெத்து என்று டைட்டில் வைத்திருந்தனர். ஆனால் தற்போது கெத்து என்ற தலைப்பிற்கு பிரச்னை வந்துள்ளது. இந்த தலைப்பை ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார். தில், தூள் உள்ளிட்ட 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் தான் இயக்க உள்ள படத்துக்காக இந்த தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். எனவே தற்போது வேறு தலைப்பு தேடிக் கொண்டிருக்கிறார் உதயநிதி.