பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
''ஷாட் பிலிம்'' எனப்படும் குறும்படங்களின் வாயிலாக பெரிய திரைக்கு வந்து பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் புரிந்துவரும் 'பீட்ஸா' நாயக நடிகரும், இயக்குநரும்... குறும்படங்களுக்காக உயிரையும் கொடுப்போம்... எனும் ரீதியில் புதுகுறும்பட இயக்குநர்களை உலகறிய செய்ய தனி வெப்சைட், தனி நிறுவனம் என்றெல்லாம் மீடியாக்களை கூட்டி சமீபத்தில், 'களேபரம்' செய்தது ஞாபகமிருக்கலாம்! அதிலும் அந்த பீட்ஸா இயக்குநர் பெரும் பப்ளிசிட்டி தேடிக்கொண்டதும் தெரிந்திருக்கலாம்! ஆனால் நிஜத்தில் தங்களை மாதிரி இனி யாரும் குறும்படத்தின் வாயிலாக தமிழ்திரைக்கு கோலோச்சி விட வந்துவிடக்கூடாது... என்பதில் உறுதியாக இருக்கின்றனராம் இருவரும்!
சமீபத்தில் பெங்களூரில் இருந்து வந்த ஒரு இளம் ஷாட் பிலிம் குழுவினர், தங்களது தமிழ் குறும்படத்தை இவர்களுக்கு போட்டு காட்டி அபிப்பிராயம் கேட்க, முனைந்திருக்கின்றனர். விஜயமான மன்னர் பெயருடைய அந்த ஹீரோ, நீங்கள் யார்? உங்களுக்காக நான் ஏன் வரணும் எனக் கேட்டு போனிலேயே முகத்தில் அறைந்தபடி பேசியிருக்கிறார்! ஹீரோவாவது பரவாயில்லை... அந்த பெரிய சைஸ் பீட்சா இயக்குநர் ஊரில் இருந்து கொண்டே நான் அன்று ஊரில் கிடையாது... என ஓவர் ஆக்ட் செய்ததுடன் இவர்கள் ஷாட் பிலிம்ஷோ போட்ட நாளன்று சென்னை, விருகம்பாக்கம் நேஷனல் பேம் தியேட்டரில் நண்பர்களுடன் வேறுபடம் பார்க் போனதை பெங்களூர் குழுவினர் பார்த்துவிட்டு துடித்து போய் ஊர் திரும்பி போயிருக்கின்றனர்! பாவம்!!
பப்ளிசிட்டிக்காக, ''ஷாட் பிலிம்களை வாழ வைக்க போகிறோம்... குறும்படத்தை கொண்டாட உள்ளோம்...'' என்றெல்லாம் உளறி கொட்டிவிட்டு அப்புறம் எங்கும் முகத்தை காட்டாமல், முதுகை காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? என்பது பீட்ஸா - பீலா டைரக்டருக்கும், ஹீரோவுக்குமே வௌிச்சம்!