தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பப்பாளி, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா. கேரள வரவான இவருககும் லட்சுமிமேனனை போன்று குடும்பப் பாங்கான வேடங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் உள்ளதாம். அதனால் அந்த படங்களுக்குப் பிறகு கமர்சியல் கதைகளில் நடிக்க மறுத்து குடும்ப கதைகளாக தேடிக்கொண்டு வருகிறார்.
ஆனால், அவர் சான்ஸ் கேட்க செல்லும் இடங்களில், இஷாராவை ஏற இறங்க பார்க்கும் டைரக்டர்கள். உடம்பு ரொம்ப பெருத்துப்போயிருக்கே. இந்த மாதிரியிருநதால் எப்படி ஹீரோயினாக நடிக்க வைக்க முடியும் என்று கேரக்டர் வேடத்தில் நடிக்குமாறு கூறுகிறார்களாம். அதோடு, கிளாமருக்குத்தான் இந்த உடல்கட்டு செட்டாகும் என்றும் சொல்லும் டைரக்டர்கள், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அவர் உறுதியாக இருப்பதால், கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
இதனால் படமே இல்லாம கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருககும் இஷாரா, ஒரு ஹிட் பட நடிகையை 3வது படத்திலேயே கேரக்டர் நடிகையாக்கப் பார்க்கிறார்களே என்று தனது டென்சனை வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில், இஷாரா, ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாட கமிட்டாகியிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
ஆனால். இதுபற்றி அவரைக்கேட்டால், இதுவரை என்னை குத்துப்பாட்டுக்கு ஆட யாரும் அழைக்கவில்லை. நானும் யாரிடமும் குத்தாட்டமாட சான்ஸ் கேட்டதுமில்லை. இபபடியொரு செய்தி எப்படி பரவியது எனறு எனக்கே தெரியவில்லை என்கிறார் இஷாரா.