ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கோச்சடையான்' படம் வெளிவருவதற்கு முன்பாக மே 5, 2014 அன்று சமூக வலைத்தளமான டிவிட்டரில் புதிய கணக்கைத் துவக்கினார் ரஜினிகாந்த். அதன் பின் 'வணக்கம்' என்று மட்டும் சொல்லி மூன்று டிவீட்டுகளையும், நரேந்திர மோடி, ஜெயலலிதா ஆகியோருக்கு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இரண்டு வாழ்த்து டிவீட்டுகளையும், 'கோச்சடையான்' படம் பற்றி இரண்டு டிவீட்டுகளையும் போட்டார்.
கடைசியாக மே மாதம் 23ம் தேதி டிவிட்டர் கடையை...சாரி...கணக்கை அவர் மூடி விட்டார். அதன் பின் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் அவருடைய டிவிட்டர் கதவு திறக்குமா என்று ரசிகர்களும், மீடியாக்களைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.
நேற்று திடீரென அவரது பிறந்த நாளையும், லிங்கா பட வெளியீட்டையும் முன்னிட்டு டிவிட்டர் கணக்கை மீண்டும் திறந்து விட்டார். முதலில் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, கலைஞர் கருணாநிதி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திரையுலகினர் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நான்கு பதிவுகளைப் போட்டுள்ளார். ஆனால், 'லிங்கா' படம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'லிங்கா' படம் பற்றி அப்படி, இப்படி என கருத்துக்கள் எழுந்துள்ளதால் மீண்டும் டிவிட்டர் பரபரப்பை ஏற்படுத்துகிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.