பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மாஞ்சா வேலு, புலிவேசம், ராவணன் படங்களில் இருந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறிய நவரச நாயகன் கார்த்திக், தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தில் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். முககியமாக, எனக்கென்று ஒரு பாணி உள்ளது. அதற்கு செட்டாகாத வேடங்களில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த கார்த்திக், அதையெல்லாம் ஏறக்கட்டிவிட்டு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறாராம்.
அதனால், அனேகன் ரிலீசுக்குப்பிறகு எனது கேரியரே மாறி விடும். என்னை வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க டைரக்டர்கள் அழைப்பார்கள் எனறு கூறிவரும் கார்த்திக், அந்த படம் வரும்வரை காத்திருக்க நினைக்கவிலலை. அதனால் தனது மகனுக்காக தன்னிடம் கதை சொல்ல வரும் இளவட்ட டைரக்டர்களிடம் எனககும் நல்ல வேடம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.
அதோடு, கார்த்திக் பெரிய நடிகர், படம் முழுக்க வரும் கேரக்டர்களில்தான் நடிப்பார் என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம். அந்த படத்தின் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக இருந்தால், ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்றாலும நான் நடிப்பேன். எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறாராம் கார்த்திக். இப்படி அவர் இறங்கி அடிக்கத் தொடங்கியிருப்பதை அடுத்து, இத்தனை நாளும் கார்த்திக் என்றாலே டேஞ்சரான நடிகர். சொன்னபடி ஸ்பாட்டுக்கு வரமாட்டார். குறித்த நாளில் நடித்து தரமாட்டார் என்றெல்லாம் பலவிதமாக பயந்து கொண்டிருந்த டைரக்டர்களின் கவனம் தற்போது கார்த்திக பக்கம் திரும்பியிருக்கிறது.