Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரஜினியும்...விருதுகளும்....!

12 டிச, 2014 - 17:19 IST
எழுத்தின் அளவு:

திரைப்படத்துறையில் கமலும் ரஜினியும் இருவேறு துருவங்கள். கமல் விருதுகளைக் குவித்து வரும் நடிகர். ரஜினியோ வசூல் ராஜா. தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினி, திரையுலகில் மட்டும் 'சூப்பர்ஸ்டார்' என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.


பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கும் முன்னோடியாக இருக்கும் ரஜினி தன் படத்தின் கதை விஷயத்தில் அலட்டிக்கொள்வதில்லை. வசூலை மட்டுமே கருத்தில் கொண்டு கதைகளை தேர்வு செய்வார். ஆனாலும் அவர் நடித்த படங்களுக்கு அவ்வப்போது விருதுகள் கிடைத்துள்ளன.


அவற்றில் முக்கியமான விருதுகளில் பட்டியல்...


* 1978 ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “தமிழக அரசு திரைப்பட விருது” வழங்கப்பட்டது.


* 1979 ஆம் ஆண்டு “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக “தேவர் விருது” வழங்கப்பட்டது.


* 1984 ஆம் ஆண்டு “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்காக “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.


* 1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி விருது” வழங்கப்பட்டது.


* 1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டது.


* 1992 ஆம் ஆண்டு “அண்ணாமலை” திரைப்படத்திற்காக “அம்பிகா விருது” வழங்கப்பட்டது.


* “16 வயதினிலே” மற்றும் “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “அரிமா சங்கம் விருது” வழங்கப்பட்டது.


* “நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீ ராகவேந்தரா”, “பிளட் ஸ்டோன்”, “தளபதி”, “அண்ணாமலை”, “வள்ளி”, “பாட்ஷா”, “முத்து” போன்ற திரைப்படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.


* “முள்ளும் மலரும்”, “மூன்று முகம்”, “முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி”, “சிவாஜி” போன்ற திரைப்படத்திற்காக 'தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்' வழங்கப்பட்டது.


2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.


சில மாதங்களுக்கு முன் கோவாவில் நடைபெற்ற சர்வதேச பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in