Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டி போட்டு நடித்த விஜயசேதுபதி-விஷ்ணு!

12 டிச, 2014 - 11:15 IST
எழுத்தின் அளவு:

கிராமத்து கதைகளாக படமாக்கி வரும் சீனுராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜயசேதுபதியை நாயகனாக அறிமுகம் செய்தார். அந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அம்மா வேடத்தில் நடித்த சரண்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து சீனுராமசாமிக்கும் அவரது படங்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டது.


பின்னர், அவரது நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு- சுனைனாவின் நடிப்பும் பேசப்பட்டது. அதற்கு முன்பு வரை ஏதோ நடிப்பார் என்று கருதப்பட்டு வந்த விஷ்ணுவிடமும் நடிப்புத்திறமை இருப்பதை நீர்ப்பறவைதான் வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்தநிலையில, தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த விஜயசேதுபதி, நீர்ப்பறவையில் நடித்த விஷ்ணு ஆகிய இருவரையும இணைத்து இப்போது இடம் பொருள் ஏவல் படததை இயக்கி முடித்துள்ளார் சீனுராமசாமி.


இந்த படத்தில் விஜயசேதுபதி-விஷ்ணு இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்களாம். அந்த அளவுக்கு இருவருக்கும் கதாபாத்திரங்களை எதிரும் புதிருமாக உருவாக்கியிருக்கிறாராம் சீனுராமசாமி. மேலும், ஏற்கனவே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருந்தபோதும், அவர்கள் ஸ்பாட்டில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் நடிக்கிறார்களோ அதைப்பொறுத்து அந்த கதாபாத்திரங்களுக்கான காடசிகளையும் அவ்வப்போது புதிதாக சேர்த்துக்கொண்டேயிருநதாராம் அவர். இதனால் இடம் பொருள் ஏவல் படம் திட்டமிட்டதை விட பிரமாதமாக வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in