Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுண்டமணியின் பன்ஞ் டயலாக்கில் தயாராகும் படம்

11 டிச, 2014 - 15:13 IST
எழுத்தின் அளவு:

இப்போது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை டைட்டிலாக வைத்து படம் எடுப்பது பேஷன், அந்த வரிசையில் அடுத்து வருகிறது "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா". சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் சூப்பர் டயலாக் இது. காலத்தை கடந்தும் பொருந்தியிருப்பதால் இப்போதும் இந்த டயலாக்கிற்கு தனி மவுசு உண்டு.


குளோபல் கிங் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த டயலாக்கையே டைட்டிலாக கொண்டு ஒரு படத்தை தயாரிக்கிறது. ஷக்தி அஜய்குமார் இயக்குகிறார், ஷாம்ராஜ் இசை அமைக்கிறார், மஸ்தான் ஒளிப்பதிவு செய்கிறார். தற்காப்பு, கரையோரம் படங்களில் நடித்து வரும் கணேஷ் பிரசாத் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ஜான் விஜய், சுப்பு பஞ்சு, என காமெடி பட்டாளம் நடிக்கிறது.


"இது அரசியல் கூத்துக்களை காமெடியாக சொல்லும் படம். எந்த தனி அரசியல் கட்சியையோ, தனி நபர்களையோ கிண்டல் செய்யும் படம் அல்ல. ஆனால் படத்தில் வரும் கூத்துகள் எல்லா கட்சியிலும் நடந்து கொண்டிருப்பவையாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஷக்தி அஜய் குமார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in