நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
சக்கரகட்டி படம் சாந்தனுக்கு தோல்வியை கொடுத்ததால் அதற்கடுத்து, திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் அவரது தந்தையான கே.பாக்யராஜ், சித்து ப்ளஸ் 2 என்ற படத்தை சாந்தனுவை வைத்து இயக்கினார். ஆனால், அந்த படமும் சாந்தனுவுக்கு தோல்வியையே கொடுத்தது. அப்பாவின் மேஜிக் ஸ்கிரிப்ட்டும் சாந்தனு விசயத்தில் தோற்று விட்டது.
அதையடுத்து, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களும் வழக்கம்போல் அமைந்து விட்டதால் இப்போது வாய்மை படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார் சாந்தனு. கிட்டத்தட்ட சத்யராஜ் கெட்டப்பில் இந்த படத்தில் நடித்துள்ளார் சாந்தனு. இதே படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ், பாண்டியராஜின் மகன் ப்ருத்வி ஆகியோரும நடித்திருக்கிறார்கள்.
மேலும், கவுண்டமணி இந்த படத்தில் முதன்முறையாக ஊர்வசியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சாந்தனுவின் தந்தையான டைரக்டர் பாக்யராஜூம், அவரது அம்மா பூர்ணிமா பாக்யராஜூம் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்த முதல் படம் டார்லிங் டார்லிங். அந்த படத்தில நடித்தபோதே காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போது சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.