ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பக்காவான ஸ்டைல், பன்ஞ் டயலாக், அதிரடி சண்டை இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றி பார்முலா என்று கூறுவார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர் தன் சினிமா கேரியரில் பல வேடங்களில் வித்தியாசமான நடிப்பை தந்திருக்கிறார்.
நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்ற இன்னொரு எஸ்.பி.சவுத்ரியாக வலம் வந்த அலெக்ஸ் பாண்டியன், நண்பனின் துரோகத்தால் சொத்தை இழந்து இழந்த சொத்தை காப்பாற்றி நண்பனையும் காப்பாற்றிய அண்ணாமலை, மற்றவர்களுக்காகவே வாழ்ந்த தர்மதுரை, தாதாவாக இருந்து மனிதனா வாழ நினைத்த பாட்ஷா, உலேகாத்தால் உருவாக்கப்பட்டாலும் அதற்குள்ளும் இதயத்தையும், காதலையும் ஏந்திய எந்திரன்.
தனக்கு கிடைக்காத மயிலு ஒரு சப்பாணிக்கு கிடைப்பதா என்ற வில்லன் பரட்டை, சென்னை குப்பத்து தாதா தேவு, பெண்பித்தனாக இருந்து திருந்திய சக்ரவர்த்தி, பெண்ணின் திமிரை அடக்கிய படையப்பா, அன்பே உருவான ஸ்ரீராகவேந்திரர், ஆன்மீகத்திற்கும், நாத்திகத்திற்கும் பாலம் அமைத்த பாபா, தங்கையின் பாசத்தை உயர்த்தி பிடித்த காளி, தம்பிகளுக்காக வாழ்ந்த காளையன், எல்லையில் எதிரிகளிடமிருந்தும் உள்ளே துரோகிகளிடமிருந்தும் நாட்டை காப்பாற்றிய ராணுவ வீரன். பால்ய நண்பனுக்காக வீடு தேடி வரும் அசோக்குமார், என அவர் காட்டிய அவதாரங்கள் பல.
எந்த வித்தியாசமான கதாபாத்திரத்தையும் தன் ஸ்டைலுக்குள் அடக்கி கொண்டு நடிப்பை வெளிப்படுத்துவது ரஜினியின் பாங்கு. எங்கேயோ கேட்ட குரல், 6லிருந்து 60 வரை, ஸ்ரீ ராகவேந்திரர் படங்களில் மட்டுமே தனது ஸ்டைலை காட்டாமல் அந்த கேரக்டராக மட்டும் வாழ்ந்திருப்பார் மற்றபடி எல்லா கேரக்டரிலுமே அவரது தனித்தன்மை மிளிரும்.
ரஜினியின் சினிமா கேரியரில் பல மாறுபட்ட அவதாரங்கள் இங்கே படங்களாக தரப்பட்டுள்ளது. அவற்றை கிளிக் செய்து பாருங்கள்.