ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'என்னை அறிந்தால்' படத்தின் ஒரு டீசர் வெளியானதற்கே அவருடைய ரசிகர்கள் இந்திய அளவில் அதிக லைக்குகளை அள்ளி அந்த டீசரை முதலிடத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் இதுவரை யூடியூப் இணையதளத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. 760000 பேர் டீசருக்கு லைக்குகளை அளித்துள்ளனர். இந்திய அளவில் அதிக லைக்குகளை அள்ளிய டீசர் என்ற பெருமை 'என்னை அறிந்தால்' டீசருக்குக் கிடைத்துள்ளது.
அதன் ஆர்ப்பாட்டமே இன்னும் அடங்காத நிலையில் நாளை 11ம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் சிங்கிள் டிராக், அதாவது ஒரு பாடல் மட்டும் வெளியாக உள்ளது. 'அதாரு அதாரு...' என்ற பாடலை நாளை வெளியிட உள்ளார்களாம். இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, விஜய் பிரகாஷ், கானா பாலா இருவரும் பாடியுள்ளனர். அதற்குள்ளாகவே, அஜித் ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் 'அதாருஅதாரு' என்ற வார்த்தையை டிரண்டிங்கில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.