600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, அதற்கு முன்பு தனது தாய்மொழியான கன்னடத்தில் அரை டஜன் படங்களில் நடித்து விட்டுதான் வந்திருந்தார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், எதிர்பார்த்தபடி அங்கு அவருக்கு மார்க்கெட் இலலையாம். அதனால்தான் தமிழுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்.
ஆனால், வந்த இடத்தில் அவர் நடித்த முதல் படமே ஹிட்டாக அமைந்தால், பின்னர் ஜீவா படத்தில் நடித்தவர், இப்போது பென்சில், காக்கி, சட்டை, ஈட்டி, வெள்ளைக்கார துரை என பல படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, சில படங்களில் கவர்ச்சி அவதாரமும் எடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
இந்த நிலையில, அவர் நடித்த வருததப்படாத வாலிபர் சங்கம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருந்தபோது, அந்த படத்திலும் நடித்துவிட தீவிரமாக முயற்சி எடுத்தாராம் அவர். ஆனால், தெலுங்கில் ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிதாக மார்க்கெட் இல்லாததால், அந்த வேடம் ராகுல் பரீத் சிங்கிற்கு சென்று விட்டதாம். அதனால் அது அவருக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டதாம்.