டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுஙகு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் ஒளடதம் படத்தில் வில்லனாக நடித்து வருபவர் தமிழடியான். இந்த படத்தில் அவர் அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு அதிரடியான அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கிறார். சர்க்கரை நோயாளிகளையெல்லாம் போலி மாத்திரையால் கொல்வது. பாலியல் குற்றம் போன்ற பலதரப்பட்ட குறறங்களை செய்யும் ஒரு வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறாராம்.
இதுபற்றி தமிழடியான் கூறுகையில், நான் இதற்கு முன்பு, விஜயநகரம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது யாழ் மற்றும் ஒளடதம், அஸ்திரம் போன்ற படங்களில நடித்து வருகிறேன். இதில் யாழ் படத்தில் இலங்கை அகதிகளை காப்பாற்றும் வேடத்தில் நடிக்கிறேன். ஒரு தமிழன் என்கிற முறையில் அகதிகளாக வரும் தமிழர்களை காப்பாற்றும் வேடத்தில் நடிப்பது எனக்கு மனதளவில் பெரிய திருப்தியை தந்தது.
மேலும், எனக்கு தமிழ் மீது அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் எனது பெற்றோர் சார்லஸ்ராஜ் என்ற பெயர் வைத்தபோதும், நான் சினிமாவுக்காக எனது பெயரை தமிழடியான் என்ற வைத்துள்ளேன். எனது மகன்களுக்கு அன்பரசன், தமிழரசன் என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று கூறும் தமிழடியான், சினிமாவில் செண்டிமென்டான வேடங்களில் நடிக்கவே அதிக ஆர்வமாக இருந்தபோதும். டைரக்டர்களோ அவரை வில்லன் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்களாம். அதனால், நான் விரும்புவதை விட இயக்குனர்கள் என்னை எப்படி வெளிக்காட்ட விரும்புகிறார்கள் என்பதே முக்கியம் என்பதால் இப்போது வில்லன் வேடங்களில் நடிப்பதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறேன் என்று கூறும் தமிழடியான், பின்னணியும் பாடுவாராம். மகான் என்ற படத்தில் தஷியின் இசையில் ஒரு கிளைமாக்ஸ் பாடல் பாடியிருக்கிறாராம். தவிர மேலும் சில புதிய படங்களிலும் பாடி வருகிறாராம்.