பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
நீர்ப்பறவை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கி வரும் படம் இடம் பொருள் ஏவல். விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகை வடிவுக்கரசி முக்கிய ரோலில் நடிக்கிறார். சீனு ராமசாமி படம் என்றாலே அதில் அழுத்தமான கதை இருக்கும், அதுபோல் இந்தப்படத்திலும் ஒரு அழுத்தமான கதையை இயக்கி வருகிறார் சீனுராமசாமி. முதன்முறையாக வைரமுத்து பாடல் எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், டிசம்பர் 18ம் தேதி படத்தின் ஆடியோ வௌியீட்டு விழாவை நடத்த உள்ளனர்.