ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சிக்ஸ்பேக் கலாச்சாரம், கோலிவுட்டுக்கும் வந்த பிறகு, சூர்யா, விஷால், தனுஷ், பரத் போன்ற நடிகர்கள் சில படங்களுக்காக சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறி நடித்தனர். அந்த வகையில், சிலர் ஒருமுறைக்கு பிறகு சிக்ஸ்பேக் வைக்க தயங்கினர். ஆனால் விஷால், சத்யம், வெடி என மீண்டும் சில படங்களுக்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறினார். இந்தநிலையில், தற்போது அருண்விஜய்யும் என்னை அறிந்தால் படத்துக்காக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறியிருக்கிறார். கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இந்த படத்தில் அருண்விஜய், வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டாலும், அவர் அஜீத்தின் நண்பராக நடிப்பதாகவே அப்படக்குழு தகவல் தருகிறது. மேலும், இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக இப்படி உடலை மாற்றியிருக்கும் அருண்விஜய், இதற்காக சில மாதங்களாக கடினமான டயட்ஸ்,உடற்பயிற்சி எடுத்து சிக்ஸ்பேக்கிற்கு மாறியவர், தான் அந்த கெட்டப்பில் நடிப்பதற்கு முன்பு, அஜீத்தை சந்தித்து தனது உடல்கட்டை காட்டியிருக்கிறார். அப்போது, அருண்விஜய்யின் சிக்ஸ்பேக்கைப்பார்த்து அசந்து போன அஜீத், உங்களை மாதிரியெல்லாம் சிக்ஸ்பேக் வைத்து நடிக்க முடியவிலலையே என்று எனக்கு வருததமாக உள்ளது என்றாராம்.