இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் - அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்திய அளவில் இந்த ஆண்டில் வெளிவந்த டீசர்களிலேயே அதிக அளவிலான லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது. இதற்கு முன் ஹிரித்திக் ரோஷன் நடித்து வெளிவந்த 'பேங் பேங்' திரைப்படம்தான் அதிக அளவிலான லைக்குகளைப் பெற்றிருந்தது. அந்தப் படத்திற்குக் கிடைத்த 61,000 லைக்குகளை நேற்றே 'என்னை அறிந்தால்' முறியடித்து விட்டது.
ரசிகர்களின் பேராதரவைப் புரிந்து கொண்ட படக்குழுவினர் விரைவில் படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இது பற்றி படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் தகவலை வெளியிட்டுள்ளார். “என்னை அறிந்தால்' படத்திற்காக நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.