'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
3, எதிர்நீச்சல், மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி படங்களின் பாடல்கள் மெகா ஹிட்டானதால் கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். அதோடு, முன்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கும் கமிட்டான அவர், கத்தி படம் புக்கானதை அடுத்து, அந்த படங்களுக்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டு, இனி மெகா படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.
இந்தநிலையில், அவரது கைவசம் தற்போது காக்கி சட்டை, ஆக்கோ, மாரி, ரங்கூன், நானும் ரெளடிதான், இதயம் முரளி என அரை டஜன் படங்கள் உள்ளன. அதனால், அனிருத்தின் இசைக்கூடாரம் எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருககிறது. மேலும், இசையமைப்பாளர்கள் விஜய்ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஹீரோவாகி விட்டதால், அவர்களிடம் இசையமைத்துக்கொண்டிருந்த மேலும் சில டைரக்டர்களும் இப்போது அனிருத்தை நாடி வந்திருப்பதால், மேலும் சில படங்கள் அவர் பக்கம் திரும்பியுள்ளன.