'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்தியத் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி பத்து வருடங்களுக்கும் மேலான பிறகுதான் த்ரிஷா கன்னடப் படம் ஒன்றில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா நடித்த 'பவர்' கன்னடத் திரைப்படம் சில நாட்களுக்கு முன் 100வது நாளைத் தொட்டிருக்கிறது.
தெலுங்கில் மகேஷ் பாபு, சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'தூக்கடு' படத்தின் ரீமேக்காகத் தயாரான 'பவர்' கன்னடத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியானது. வெளியான சில நாட்களுக்குள்ளேயே பத்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையைப் படைத்த இத்திரைப்படம் கன்னடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களுள் ஒன்றாக இடம் பெற்றது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தைத்தான் ஹிந்தியில் 'ஆக்ஷன் ஜாக்சன்' என்ற பெயரில் அஜய் தேவகன் நடிக்க, பிரபு தேவா ரீமேக் செய்தார். இந்த படம் சில நாட்களுக்கு முன்தான் வெளியானது. இப்படி ஒரு குப்பைப் படத்தைப் பார்த்ததில்லை என பாலிவுட் விமர்சகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். தெலுங்கு, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு படம் ஹிந்தியில் தோல்வியடைகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்.