வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2014 ஆம் ஆண்டில் சுமார் 200 படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடி, விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக, சூப்பர் கலெக்ஷன் என்று ஒட்டுமொத்த படத்துறையினரும் ஒருமித்த குரலில் சொன்ன படம் - வேலையில்லா பட்டதாரி. தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் தனுஷ் தயாரித்த விஐபி படத்தின் பட்ஜெட் - தனுஷின் சம்பளம் சேர்க்காமல் - வெறும் ஐந்து கோடிதான். தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை 12 கோடிக்கு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு விற்றார். 25 கோடிக்கு மேல் வசூல் செய்தது விஐபி படம். மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த கூட்டணி சும்மா இருக்குமா? விஐபி கூட்டணி விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். முதல்முறையாக இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி முதல் துவங்குகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், இப்படத்தைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இன்னொரு பக்கம் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.