பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
லிட்டில் மேஸ்ட்ரோ யுவன்சங்கர் ராஜா, பொங்கல் திருநாளில், தனது ரசிகர்களுக்கு இசைவிருந்தை படைக்க உள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கு, யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் , சமீபத்தில் சென்னையிலும், தனது இசையால், ரசிகர்களை மகிழ்வித்த யுவன், தற்போது, நெல்லையில், தனது ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
கிரீன் டிரீஸ் சொல்யூசன்ஸ் மற்றும் ஜெனி இன்போடெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டன. இந்நிகழ்ச்சியில், யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, தமிழ்நாட்டில், அதுவும் திருநெல்வேலியில், தான் நிகழ்ச்சி நடத்த இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய முதல் படமான அரவிந்தனும், நெல்லை சுற்றுவட்டாரப்பகுதிகளிலே படமாக்கப்பட்டது.
நெல்லையில் நடைபெற உள்ள யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ் இசை நிகழ்ச்சியில், மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா பங்கேற்கிறார். அவருடன் பாடகர்கள் கார்த்திக், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், பெல்லி ராஜ், ஸ்வேதா பண்டிட், பிரியா ஹிமேஷ், பிரியதர்ஷினி, ரம்யா உள்ளிட்டோருடன் 47 இசைக்கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.
2015 ஜனவரி 15ம் தேதி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பெல்பின்ஸ் மைதானத்தில், இந்த இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. கானம் பொங்கல் என்ற தலைப்பில் இசைவிருந்தை படைக்க உள்ளோம். இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் நேரடி பார்வையில் நடைபெற உள்ள முதல் இசைநிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.