'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
நடிகைகள் ரகசிய திருமணம் செய்து கொள்வது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தான். பல்வேறு காரணங்களால் திரையுலக வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே விலகிச் சென்று விடுவார்கள். பெரும்பாலான நடிகைகளின் திருமணம் காதல் திருமணமாகவே இருக்கும். சிலர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே மறைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அப்படி ஒரு நடிகை தனக்குத் திருமணம் ஆனதை கடந்த எட்டு மாதங்களாக மறைத்து வைத்திருக்கிறார்.
ஜெயம் ரவி ஜோடியாக, 'இதயத் திருடன்' படத்தில் நடித்த காம்னா ஜெத்மலானிதான் அந்த ரகசியத் திருமணம் செய்து கொண்ட நடிகை. “மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா” உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும், சில ஹிட்டான தெலுங்குப் படங்களிலும் நடித்தவர் காம்னா. தமிழில் அவர் நடித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறாததால் இங்கு அவரால் முன்னணி நடிகையாக வரவே முடியவில்லை.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த சூரஜ் என்ற இஞ்சினியரை காம்னா மணந்து கொண்டாராம். இத்தனை நாட்களாக இந்த திருமணத்தைப் பற்றி மறைத்து வைத்திருந்த காம்னா, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது தனக்கு திருமணம் நடந்ததைப் பற்றி தெரிவித்தாராம்.