ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஆன்லைன் என அழைக்கப்படும் இணையதள உலகில், அஜித்தின் ரசிகர்கள் தான் வலிமையானவர்கள் என்பதை என்னைஅறிந்தால் டீசர் நிரூபித்துள்ளது.நேற்று நள்ளிரவு சரியாக 12 மணியளவில் வெளியிடப்பட்ட என்னைஅறிந்தால் டீசரை, யூடியுபில், இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். யூடியூபில், ஒரு டீசர் அல்லது டிரைலரைப் பார்வையிடுபவர்களை வைத்து அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களின் வலிமையையும் தெரிந்துகொள்ளலாம்.
என்னைஅறிந்தால் டீசரை, நேற்று ஒருநாளில்மட்டும், சுமார் 40,000 பேர் லைக் கொடுத்து ரசித்துள்ளனர். ஒரேநாளில் வேறு எந்தப்படத்திற்கும், இப்படிப்பட்ட லைக் கிடைத்த்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவிதத்தில், ரஜினிகாந்தை விட, சுமார் மூன்று மடங்கு அதிகமாக முன்னிலை பெற்றிருக்கிறார்அஜித். கடந்தமாதம் 15ம்தேதி, வெளியிடப்பட்ட ரஜினிகாந்தின் லிங்கா டிரைலரை, இதுவரை, வெறும் 16,000 பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். அக்டோபர் மாதம் 19ம்தேதி, வெளியிடப்பட்ட விஜய்யின்கத்தி டிரைலரை, இதுவரை சுமார் 30,000 பேர்மட்டுமே, லைக் செய்துள்ளனர். ஷங்கர் இயக்கும் ஐ படடீசர், செப்டம்பர் மாதம் வெளியானது. இன்றுவரை, அதை 41,000 பேர் லைக் செய்துள்ளனர். ஆக, மேற்சொன்ன மூன்று படங்களின் டீசர், டிரைலர்களின் லைக்குகளை மிகவும் குறுகிய காலத்தில் என்னைஅறிந்தால் டீசர், பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
அஜித்ரசிகர்கள், நேற்று முதலே என்னைஅறிந்தால் டீசரை அதிகமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆன்லைன்-ல், அஜித் ரசிகர்கள்தான் அரசர்கள் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.இந்திய அளவிலும், உலக அளவிலும் என்னைஅறிந்தால் டீசர், டிவிட்டரில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.