'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காங்கிரஸில் சமீபத்தில் இணைந்த குஷ்பு, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப் பற்றி கமெண்ட் அடித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியைப் பற்றி ஏதாவது பேசினால்தான், பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதற்காக, அவர் அப்படி பேசியிருக்கலாம் என்றார்கள். அதன்படியே, பத்திரிகைகளும் அதற்கு முக்கியத்துவம் அளித்து செய்தியை வெளியிட்டன.
இதனிடையே, இருதினங்களுக்கு முன், குஷ்பு, திடீரென ரஜினியைப் பற்றிப் பாராட்டி ஒரு பதிவை அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் போட்டிருக்கிறார். “இந்த மனிதரிடம் தான் எப்படிப்பட்ட கவரும் தன்மை உள்ளது. பணிவாக நடப்பது தான் அவருடைய மிகப்பெரிய சொத்து. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.