டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. விஷ்ணு-சரண்யாமோகன் நடித்த இந்த படத்தில் செல்வகணேஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். அதையடுத்து, கொல கொலயா முந்திரிக்கா, துரோகி, குள்ள நரிக்கூட்டம், ரெட்டவாலு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அதன்பிறகு அவர் இசையமைத்த படங்களும், அவரது பாடல்களும் ஹிட்டாகாததால் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கிறார் அவர்.
இந்த நிலையில், தற்போது அவரது மகன் சாமிநாதன் ஐவராட்டம் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்தில் எப்படி செல்வகணேசுக்கு கபடி விளையாட்டை மையமாகக்கொண்ட படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததோ, அதேபோல் மகன் சாமிநாதனுக்கு புட்பால் விளையாட்டை மையமாகக்கொண்ட படத்தில் இசையமைக்கும் சான்ஸ் கிடைத்திருக்கிறது.