Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜப்பானில் தயாராகும் ஜம்போ 3டி!

04 டிச, 2014 - 15:08 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படம் என்றால்...ஆ படம்தான். ஆ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், படம் வெளியான ஓரிரு நாட்களிலேயெ கூடுதல் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. ஆ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இப்படக் குழுவினரின் அடுத்த தயாரிப்பு ஜம்போ. இப்படத்தை 3டியில் உருவாக்குகின்றனர். இப்படத்தின் இயக்குநர்களான ஹரி ஹரிஷ் ஏற்கனவே அம்புலி என்ற படத்தை 3டியில் இயக்கி உள்ளனர்.


ஜம்போ 3டி படத்தை குழந்தைகளை குறி வைத்து காமெடி படமாக உருவாக்க இருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி - ஹரிஷ். ஓர் இரவு, அம்புலி 3டி, ஆ படங்களை தொடர்ந்து ஹரி - ஹரிஷ் இயக்கும் 4-ஆவது படமான இப்படத்திலும் அம்புலி கோகுல் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு மைம் கலைஞர் வேடம். ஜப்பானுக்கு கலைநிகழ்ச்சி நடத்தச்செல்லும் குழுவினர் சந்திக்கும் அனுபவங்கள்தான் கதை. கோகுலுக்கு ஜோடியாக அஞ்சனா நடிக்கிறார். இவர் அழகிய பாண்டிபுரம் படத்தில் நாயகியாக நடித்தவர். ஈரோடு மகேஷ், லொள்ளு சபா ஜீவா, சுகன்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஆ படத்தின் படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றபோதே ஜம்போ படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வந்துள்ளனர் இயக்குநர்கள் ஹரியும், ஹரிஷும்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in