டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கும்கி படத்தில் விக்ரம் பிரபு, தம்பி ராமைய்யாவுடன் இணைந்து நடித்தவர் அஸ்வின், ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனின் மகனாக இவர் நடித்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் அஸ்வின். இவர் லட்சுமி மூவி மேக்கர் சாமிநாதனின் மகன் ஆவார். மேலும், எத்தன், கனிமொழி, நாங்க, நய்யாண்டி, மஞ்சப்பை, தில்லுமுல்லு போன்ற படங்களில் அஸ்வினின் காமெடி பேசும்படியாக இருந்ததால், இப்போது கோடம்பாக்கத்தில் வளர்ந்து வரும் காமெடியன்களில் அஸ்வினும் ஒருவராகி விட்டார்.
இந்தநிலையில, தற்போது விமல் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய காமெடியனாக இவர் கமிட்டாகியிருக்கிறாராம். விமல் நடிக்கும் பெரும்பாலான படங்களில் சந்தானம், புரோட்டா சூரி, சிங்கம்புலி போன்ற காமெடியன்கள்தான் இடம்பெறுவார்கள். ஆனால் அவர் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திற்கு அஸ்வினையே படம் முழுக்க அவருடன் வரும் முக்கிய காமெடியனாக்கியிருக்கிறார்களாம். அதனால் இதுவரை பல காமெடியன்களுடன் தானும் ஒருவராக வந்து கொண்டிருந்த அஸ்வின், இப்போது நானும் ஷோலோ காமெடியனாகி விட்டேன் என்று உற்சாகம் பொங்க சொல்கிறார்.