Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தஞ்சாவூரில் தாரை தப்பட்டை..! வரலட்சுமி மகிழ்ச்சி!

03 டிச, 2014 - 11:37 IST
எழுத்தின் அளவு:

ஷ்...அப்பாடா! ஒருவழியாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி பல மாதங்களாகிவிட்டநிலையில் படத்தின் படப்பிடிப்பு மட்டும் காலதாமதமாகிக் கொண்டே இருந்தது.


இதுகுறித்து விசாரித்தபோது, ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என்றும், சசிகுமாருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் பயிற்சியும், வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆட பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு டெஸ்ட் ஷூட் எடுத்து பார்த்து விட்டு அதன் பிறகே படப்பிடிப்பை துவக்க பாலா திட்டமிட்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.


இன்னொரு தரப்பினரோ, சேது படம் வெளியானது டிசம்பரில்தான். அதனால் பாலாவுக்கு டிசம்பர் மாதம் மீது சென்ட்டிமெண்ட் உண்டு. எனவே தாரை தப்பட்டை படத்தை டிசம்பர் மாதம்தான் தொடங்குவார் என்று சொல்லி வந்தனர்.


இந்த கூற்றை உண்மையாக்குவதுபோல் சில தினங்களுக்கு முன் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியது. கரகாட்டம் மற்றும் நாதஸ்வரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிப்பது குறித்து நான் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாலா சாரின் தாரை தப்பட்டை படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. பாலா சார் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று வரலட்சுமி ட்வீட் செய்துள்ளார்.


தாரை தப்பட்டை படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in