ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் - விஷால் - லட்சுமி மேனன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவார்கள் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால், நேற்று விஷால் ஜோடியாக அந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவியது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம். அப்படியிருக்க தற்போது திடீரென நாயகியை மாற்றிவிட்டார்களா, அல்லது படத்தில் இரண்டு நாயகிகளா என்பது சஸ்பென்சாகவே உள்ளது.
விஷால் - லட்சுமி மேனன் இருவரும் 'பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களில் இதற்கு முன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் அதிகம் வெளிவந்தாலும் இருவரும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை. விஷாலுக்கும் இன்னொரு நடிகரின் வாரிசுக்கும் இடையேதான் காதல் கிசுகிசு உலவி வருகிறது. அப்படியிருக்க லட்சுமி மேனனை விஷால் படத்திலிருந்து நீக்கியிருக்கவும் வாய்ப்புகள் குறைவு என்று சொல்லி வருகிறார்கள். லட்சுமி மேனன் தற்போது கார்த்தி ஜோடியாக 'கொம்பன்' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக்குடன் ஜோடியாக நடிக்கும் 'சிப்பாய்' படம் நீண்ட நாட்களாகவே படப்பிடிப்பில் உள்ளது.
விஷாலுடன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் லட்சுமி மேனன் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.