'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய்யின் 60வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என தகவல்கள் அடிபடிகிறது. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி.ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அயன், கோ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய மாற்றான் படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனையடுத்து தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், அனேகன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த், விஜய்யின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் 60வது படமாகும். ஆக்ஷ்ன், ரொமான்ஸ் கலந்த கலவையாக விஜய்யின் 60வது படம் இருக்குமாம்.
தற்போது விஜய், தனது 58வது படமாக சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். விரைவில் படம் பற்றிய அறிவிப்பும், அடுத்தாண்டு(2015) மத்தியில் இப்படம் துவங்கும் என தெரிகிறது.