ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தை பிலிம் டிபார்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத், கோவிந்தராஜ் தயாரிக்கிறார்கள். ரேடியன்ஸ் மீடியாக சார்பில் வருண் மணியன் வெளியிடுகிறார். இந்தப் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் மணிமாறன் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் வெற்றிபெறவே முடியாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவரை சந்திக்கும்போது இவரும் ஜெயிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைப்போம். படத்தில் ஜெய் நடிக்கும் கேரக்டர் அப்படி நினைக்க வைக்ககூடியது. கேரக்டர் பெயர் புகழ். பெயருக்கு ஏற்ற மாதிரி சாதாரணமாக இருந்து எப்படி புகழ் பெறுகிறார் என்கிற கதை. ஆக்ஷன் த்ரில்லர் வகை கதை.