டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதுவாக பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளில் படங்களை வெளியிடுவதைப்போல் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று படங்களை வெளியிட திரையுலகினர் ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இந்த வருடம், கிருஸ்துமஸ் அன்று ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன. கிருஸ்துவ மதத்தில் தீவிர பற்று கொண்ட பிரபுசாலமன், தன்னுடைய கயல் படத்தை கிருஸ்துமஸ் பண்டிகை அன்றுதான் வெளியிட வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தார். அதை அவ்வப்போது வெளிப்படையாக சொல்லியும் வந்தார்.
பிரபுசாலமனைப்போலவே கிருஸ்துவரான எஸ்.ஜே.சூர்யாவும் தான் இயக்கி நடித்துள்ள இசை படத்தை கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிட விரும்பி தியேட்டர்களை கமிட் பண்ணி வருகிறார். இவ்விரு படங்களுக்கே போதுமான தியேட்டர்கள் இருக்காது என்றநிலையில், எனக்குள் ஒருவன், வெள்ளக்காரதுரை, மீகாமன் ஆகிய படங்களும் கிருஸ்துமஸ் ரேஸில் சேர்ந்து கொண்டன. இந்நிலையில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கி, ஷங்கர் வெளியிட உள்ள கப்பல் படத்தையும் கிருஸ்துமஸ் அன்று வெளியிட உள்ளனர்.
தான் இயக்கிய ஐ உட்பட ஜனவரியில் பெரிய படங்கள் பல வரிசை கட்டி காத்திருப்பதால் டிசம்பரிலேயே அதாவது கிறிஸ்துமஸ் வெளியீடாக கப்பல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். ஏற்கெனவே இசை, கயல், எனக்குள் ஒருவன், வெள்ளக்காரதுரை, மீகாமன் ஆகிய 5 படங்கள் கிறிஸ்துமஸ் பந்தயத்தில் களத்தில் உள்ளன. ஆறாவது படமாக இப்போது கப்பல் படமும்...!
கிருஸ்துமஸ் கச்சேரி களை கட்டிடுச்சே..!